Friday, June 29, 2012

ஆண் பெண் நட்பு



ஆண் பெண் நட்பு 


இந்த காலத்தில் எனக்கு இத்தனை ஆண் நண்பர்கள் என பெண்கள் சொல்வதும் எனக்கு இத்தனை பெண் தோழிகள் என ஆண்கள் சொல்வதும்பொதுவானது .


ஆணும் பெண்ணும் காமம் இல்லாத வெறும் நட்புடன் எந்த எல்லையும் இல்லாமல் பழக முடியுமா?


சில தூய எண்ணம் உள்ள உதவும் எண்ணம் படைத்த ஆண் பெண் நட்பு இருக்கத்தான் செய்கிறது....அவர்களை நான் குறை சொல்லவில்லை


எல்லாம் ஒரு அளவுக்குள் இருந்தால் அது நல்லது.....அளவுக்கு மீறினால் ?





ஆண்களும் ,பெண்களும் கூட படிக்கும் சக நண்பர்கள் என்ற முறையில் பேசலாம் பழகலாம் ...ஆனால் அவர்கள் அவர்களின் எல்லையை தாண்ட கூடாது....... ஒன்றாக தங்குவது வெளியே செல்வது, பைக்கில் ஊர் சுற்றுவது,சினிமா செல்வது போன்றவை அந்த எல்லையில் அடக்கம்.....

அதற்காக நான் எல்லா ஆண்களையும் குறை சொல்ல வில்லை....கடலில் குண்டூசியை தேடுவதுபோல கடினமானது நல்ல எண்ணத்தோடு எந்த எல்லையும் வைத்து கொள்ளாமல் பழகும் ஆண் பெண் நட்பு....அதே கடலில் மீன் பிடிப்பது போன்ற எளிதானது தீய எண்ணங்களோடு பழகும் ஆண் பெண் நட்பு.....


கடலில் மீன்களை வலை போட்டு எளிதாக பிடிக்கலாம்....குண்டூசியை எடுக்க முடியுமா

ஆண் பெண் நட்பை இந்த சமூகம் அங்கீகரிக்க பழக்கப்படவில்லை .நட்பு வேண்டாம் என்று சொல்லவில்லை .அளவுடன் இருந்தால் நல்லது.

Tuesday, June 19, 2012

லவ் பண்ண போறிங்களா ?



லவ் பண்ண போறிங்களா ?


உங்களுக்கு ஒருவரது நடத்தை,குணம் மிகவும் பிடிக்கிறதா ? அவர் உங்களிடம் காதலை சொல்லுவார் என எதிர்பார்கிரிங்களா? அப்படிஎன்றால் நீங்கள் காதலிக்க தயராகிவிட்டிர்கள் ....

அவசரப்படாதிர்கள் ....இதோ கொஞ்சம் காரமான டிப்ஸ்...

அவர் உங்கள் நண்பராக ,தெரிந்தவராக இருக்கலாம் ..காதலராக மாறியதும் அவர்களது குணம் மாறும்.எனவே நண்பராக ,தெரிந்தவராக இருக்கும் போதான குணங்களை கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதிர்கள் .


                                                               

அவரைத்தான் காதலிப்பேன் என்று விடாப்பிடியாக இருக்கிரிரிகளா ?
அதற்கு முன்பாக அவரது குடும்ப விடயங்கள்,காதல் திருமணத்தை பற்றி குடும்ப அபிப்ராயங்களை மறைமுகமாக தெரிந்து கொள்ளுங்கள் .

அவரை சந்திக்க செல்லும் போது மேக்கப் ,கவர்ச்சியான உடை என்பவற்றை தவிருங்கள் .இயல்பாகவே இருங்கள் (சீன் போடாமல் )

உங்கள் காதலர் உலகமே போற்றும் நல்லவராக இருக்கட்டும் .எக்காரணம் கொண்டும் ,எந்த சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதிர்கள் . (அது தான் வெட்டியா நண்பிகள் இருக்காங்களே அழைச்சிகிட்டு போங்க ,சிலவேளை அவர்ட யோக்கியத்தனம் விளங்கும் )...
                                       
                                                                
தனிமையும் ,இளமையும் எப்பேர்பட்ட நல்லவரையும் கெட்டவராக்கலாம்.

ஜாக்கிரதை .......

என்ன காரம் போதாதா ?

Tuesday, March 13, 2012

நீ நடத்திய நாடகத்தில் நானும் ஒரு பகுதி நடிகன் .




நீ தான் என் வாழ்க்கை என்று உன் கரம் பிடித்தேன் 

நீ தான் என் உலகம் என்று உன்னை இதயத்தில் சுமந்தேன் 

கைகளுக்கும் உன்னை சுமந்த இதயத்திற்கும் அன்று

 தெரியவில்லை.! நீ என்னை கண்ணீரில் மிதக்க விட்டு 

செல்லப்போகிறாய் என்று .

உனக்கு தெரியாது நீ என் இதயத்தில் எவ்வளவு ஆழமாக்கபட்டவள் என்று

உனக்கு எங்கே தெரியப்போகிறது ,புரியப்போகிறது என் வலி 

காயப்பட்ட எனக்கு தான் தெரியும் காதலின் வலி !

உன்னை பொறுத்தவரை நீ நடத்திய நாடகத்தில் நானும் ஒரு பகுதி நடிகன் .

 முதலில் காதாநாயகன் வேடமிட்டேன் இறுதியில் குணச்சித்திர வேடமேந்தினேன் .







Monday, March 12, 2012

எல்லாருக்கும் உன்னை பிடிக்கிறதாம்


எல்லா ஆண்களுக்கும் 
உன்னை பிடிக்கிறது 
.
.
.
.
அதற்காக 
.
.
.

பெருமிதம் கொள்ளாதே.

உனக்கு தெரியுமா ?

சந்தையில் மலிவு பொருட்களுக்கு 
கிராக்கி அதிகம் !!


(மலிவான செருப்பை உபயோகித்ததனால் ஏற்பட்ட பாதிப்பு ) 

(குறிப்பு :மலிவு பொருட்கள் எளிதில் பழுதடைந்துவிடும் ....)


shi-Live



















Don't Be Proud If Every Boy Wants You..! Remember One thing, Cheap Items Have Too Many Buyers 

Saturday, March 10, 2012

மனநோய் ஏற்பட காரணங்கள்


உடற் செயல்களும்,உள செயல்களும் சூழ்நிலைக்கு தக்கவாறு திருப்தியான முறையில் பொருத்தமுற்றால் தான் உடல் உள நலம் ஆரோக்கியமாக இருக்கும் .உடல் நலம் என்பது உடலின் நன்னிலை ,அந்நிலையில் உடல் வன்மையும் ,மனத்திறனும் வாழ்கையில் மனநிறைவும் ஏற்படுகின்றது .


பிரச்சினைகள் இல்லாத மனிதர்கள் இல்லை .மனிதனாக பிறந்த ஒவ்வொருவருவனும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கும் .அப்பிரச்சினையை தாண்டி அதனை சுவாரசியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவது தான் வாழ்கையின் வெற்றி .அதை விடுத்து அந்த பிரச்சினையைப்பற்றியே சதா நேரமும் நினைத்து கொண்டு வேறெந்த முயற்சிகளும் இல்லாமல் இருக்கும் நிலையில் மனநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு


மனநோய் ஏன் ஏற்படுகின்றது ?

மனநோய் பெரும்பாலும் சிந்தனை ,உணர்ச்சி ,செயலாற்றல்,நினைவாற்றல் போன்றவற்றில் ஏற்படும் குறைகளால் ஏற்படுகின்றது .

இக்கட்டுரை எழுதும் அளவிற்கு நான் மனவியல் துறையில் தேர்ச்சி பெற்றவன் அல்ல.நான் வாழ்கையில் சந்தித்த ஒரு ஒரு பெண்ணின் அனுபவத்திலிருந்து வடிந்ததே இக்கட்டுரை .

நான் அவ் அனுபவத்திலிருந்து பெற்ற பெரும்பாலான விடயங்களை சுமந்து வருகின்றது இக்கட்டுரை .




மனநோய் ஏற்பட மிக முக்கிய காரணம் ஏற்படும் சிந்தனை குழப்பங்கள் ஆகும் .


                                                                     



மனநோய் ஏற்பட்டவரின் சிந்தனையானது அவரது அறிவிற்கும் அனுபவத்திற்கும் பொருத்தமற்றதாக இருக்கும் .கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பார்கள் .நடக்கவே நடக்காத வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத விடயங்கள் நடக்கும்  என வீண் கற்பனை கொள்வார்கள் .


                                                                          



ஒரு விடயத்தை நேரடியாக கூறாமல் சுற்றி வளைத்து பேசுவார்கள் .மேலும் கூறும் விடயத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பிருக்காது .சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வர் .ஒரு விடயத்தை பேசிக்கொண்டிருக்கும் போது திடிரென்று சம்பந்தமில்லாமல் வேறொரு பேச்சை பேசுவார்கள் .திடிரென்று பேச்சை நிறுத்துவார்கள் .

சில சமயம் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் மெளனமாக இருப்பார்கள் இலேசான ஞாபக மறதியும் இருக்கும் .

சிந்தனை குழப்பத்தில் பல தவறான நம்பிக்கைகள் ஏற்படும் .இத்தகைய நம்பிக்கை அவரது கல்வி அறிவிற்கும் ,கலாச்சார பழக்கவலக்கத்திற்கும் சற்று பொருந்தாமல் இருக்கும் .இது தவறானது என எவ்வளவு சொன்னாலும் அத்தகைய தவறான நம்பிக்கைகளை மனதிலிருந்து அகற்ற முடியாது .தன்னை சுற்றியுள்ளவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும்  தன் வாழ்கையை சீரழிப்பதாகவும் உணர்வார்கள் .

இது தவிர எவ்வளவு தான் மறக்க முயன்றாலும்,தடுக்க முயன்றாலும் ,சில கெட்ட என்ணங்களும் உணர்ச்சிகளும் மனதில் உண்டாகும் .அவ் எண்ணங்கள் தவறு என உணர்ந்தும் செய்வார்கள் .


மனிதர்களது உணர்ச்சி மாற்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாறுபடும் .ஆனால் மனநோயாளியை பொறுத்த வரையில் அவர்களது உணர்ச்சிகள் அளவுக்கதிகமாகவோ ,குறைந்தாதகோ மற்றும் சூழ்நிலைக்கும் ,சந்தற்பத்திற்கும் சற்று பொருந்தாமல் இருக்கும் .சாதாரணமாக ஒரு மனிதன் கோபநிலைக்கு சென்றால் .அந்த கோபநிலை ஏற்பட காரணமான சூழ்நிலை மாறியவுடன் சாதாரண மனநிலைக்கு வந்துவிடுவார் .ஆனால் மனநோயாளிக்கு அப்படியல்ல.அந்த கோப உணர்ச்சி வெகு நாட்கள் நீடிக்கும் .கோபம் ஏற்பட யாராவது காரணமாக இருந்தால் அவர்களை பழிவாங்குவதற்காக மடத்தனமான வேலைகளை செய்வார்கள் .

                                                                       

தங்களை பற்றி பிறரிடம் பெருமையாக கூறுவார் .மற்றவர்களை இழிவானவர்களாகவும் ,கெட்டவர்களாகவும் சித்தரிப்பார்கள் .இடைக்கிடையில் நான் அப்படியல்ல எனவும் பெருமையாக சொல்வார்கள் .

மிதமிஞ்சிய கோபம் ,பொறாமை ,வெறி சந்தேக உணர்ச்சிகள் ,பழிவாங்கல் சில வேலை தற்கொலை எண்ணம்களும் தோன்றும் .இதன்போது அவர்களது செயல்கள் மிகவும் மடத்தனமாகவும் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாமலும் இருக்கும் .


நன்றி ....

உங்கள் 
shi-Live