நீ தான் என் உலகம் என்று உன்னை இதயத்தில் சுமந்தேன்
கைகளுக்கும் உன்னை சுமந்த இதயத்திற்கும் அன்று
தெரியவில்லை.! நீ என்னை கண்ணீரில் மிதக்க விட்டு
செல்லப்போகிறாய் என்று .
உனக்கு தெரியாது நீ என் இதயத்தில் எவ்வளவு ஆழமாக்கபட்டவள் என்று
உனக்கு எங்கே தெரியப்போகிறது ,புரியப்போகிறது என் வலி
காயப்பட்ட எனக்கு தான் தெரியும் காதலின் வலி !
உன்னை பொறுத்தவரை நீ நடத்திய நாடகத்தில் நானும் ஒரு பகுதி நடிகன் .
முதலில் காதாநாயகன் வேடமிட்டேன் இறுதியில் குணச்சித்திர வேடமேந்தினேன் .
No comments:
Post a Comment