Tuesday, June 8, 2010

அதிர்ஷ்டத்தை தேடி போவோமா?

அதிர்ஷ்டத்தை தேடி போவோமா?

ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சி மற்றுமன்றி அதிர்ஷ்டமும் இன்றியமையாதது.எனினும் அதிர்ஷ்டம் மட்டும் அவ் வெற்றியை தீர்மானிப்பதில்லை.



ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற நன்கு முயற்சி செய்கிறான்.எனினும் அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை எனில் அவன் வெற்றி பெற முடியாது என்பது இல்லை. நிச்சயமாக அவ் முயற்சி அவனை ஒரு நாள் வெற்றி பெற வைக்கும்.

இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.அவர்கள் இன்று தான் வெற்றியாளர்களாக உள்ளனர்.நிச்சயமாக அவர்கள் பின்னால் வெற்றி பெறாத எத்தனையோ வருட முயற்சி (உழைப்பு) இருக்கும்.

வெற்றி பெற் அதிஷ்டம் நிச்ச்யமாக தேவை என ஒரு போதும் முயற்சியாளன் கருத மாட்டான்.மாறக சோம்பேறிகளே அதிர்ஷடத்தை எதிர்பார்து காலத்தை வீணடித்து கொண்டிருப்பார்கள்.




அதிர்ஷடத்தை எதிர்பார்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் ஒரு போதும் நெருங்காது.

இறைவன் ஏல்லாருக்கும் நல்ல அறிவையும்,அதிர்ஷ்டத்தையும் வழங்குவதில்லை.நாம் தான் அதிஷ்டத்தை தேடி போக வேண்டும்.......

எப்படி.................?

அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்காமல் பொறுமையுடன் நங்கு முயற்சி செய்வோம்...

அதிர்ஷ்டம் எம்மை தேடி வரும்.......

நன்றி

Shi-Live

enkaruththu@gmail.com

Monday, June 7, 2010

அழகு

அழகு என்றால் என்ன?

எது அழகு?

ஒருவரின் தோற்றமா?

இல்லை ஒருவர் அனியும் விதவிதமான ஆடைகளா? இல்லயெனில் அவர் செய்து கொள்ளும் அலங்காரங்களா?





இந்த நவீன உலகின் மனிதர்களின் பார்வையில் அழகு என்பது ஒருவரின் கவர்ச்சிகரமான தோற்றம்..அவர் அணியும் ஆடை அலங்காரங்க்களில் தங்கியுள்ளது. இன்றைய இளைஞர்கள் தம் இளமைக் காலத்தை தன்னை அழகு படுத்துவதிலேயே அதிக காலத்தை செலவழிக்கிறான். இதனால் இந்த அழகு என்ற சாதனம் மூலம் அவன் எதிர்காலமே கேள்விக்குறியாகும் வாய்ப்பு உள்ளது......இல்லையா?

பெண்கள் கண்ணாடி முன் நின்று தம் முக அமைப்பு,தலைமுடி ஒழுங்குகள் பற்றி கவலைப்படுவதும்,அதை செப்பனிட காலத்தையும் ,பணத்தையும் செலவழிக்கின்றனர்.






நிச்சயமாக கறுப்பு,வெள்ளை என்ற நிற வேறுபாடு அழகிற்கு காரணமாய் இருப்பதில்லை.....................


உங்களுக்கு தெரியுமா மனிதன் தன் உறுப்புகளால் செய்யும் நல் செயல்கள் அவ் வவ் உறுப்புகளுக்கு அழகை சேர்கின்றது..


ஒரு மனிதன் தன் உதட்டை உதட்டு சாயத்தினால் அழகு படுத்துவதன் மூலம் அது அழகாகி விடுவதில்லை.மாறாக மற்றைய மனிதர்களுடன் அவன் பேசும் விதமே அவ் உதட்டிற்கு அழகு சேர்கின்றது.






அதே போல் ஒருவர் தன் கைகளால் ஒருவருக்கு உதவி செய்தலே அக்கைகளுக்கு அழகு சேர்க்கிறது.






அழகு என்பது ஒருவர் தோற்றத்தை கண்ணாடியில் பிரதிபலிப்பது அல்ல.

உங்கள் உண்மையான அழகை தெருந்து கொள்ள உங்கள் உருவத்தை சமூகம் என்னும் கண்ணாடியில் பாருங்கள்
மற்றவர்களுக்காக தம் வாழ்வை அர்பணித்தவர்களே உலக அழகர்கள்,அழகிகள்....


Sunday, June 6, 2010

என் கருத்தின் அறிமுகம்

நான் கடந்த இரு வருடங்களாக வலைப்பதிவுகளை இட்டு வருகின்றேன்.எனினும் தாய் மொழியாம் தமிழிற்கு என்றே ஒரு வலைப்பதிவு தளம் நிறுவவில்லையே என்ற குறை என்னில் இருந்தது..இதோ அக்குறையை போக்க இவ் வளைத்தளம்.....................................

என் கருத்து என்பதே வலைத்தளத்திற்கான் பெயர்.சமுதாய கருத்துகள்,நற்சிந்தனைகள்,சமூக ஏக்கங்கள்,கல்வி
.........மேலும் பல..............போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வலைப்பதிவு தளம் வலம் வரும்..

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு என்பது மிக முக்கியமானது.-என் ஆக்கங்களுக்கு பின்னுட்டல் இடுவதன் மூலம் என்னை ஊக்கப்படுதுங்கள்.

உங்கள் அனைவரையும் இவ்வலைப்பதிவு தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்....


நன்றி..........
இப்படிக்கு

Shi-Live

enkaruththu@gmail.com