Monday, June 7, 2010

அழகு

அழகு என்றால் என்ன?

எது அழகு?

ஒருவரின் தோற்றமா?

இல்லை ஒருவர் அனியும் விதவிதமான ஆடைகளா? இல்லயெனில் அவர் செய்து கொள்ளும் அலங்காரங்களா?





இந்த நவீன உலகின் மனிதர்களின் பார்வையில் அழகு என்பது ஒருவரின் கவர்ச்சிகரமான தோற்றம்..அவர் அணியும் ஆடை அலங்காரங்க்களில் தங்கியுள்ளது. இன்றைய இளைஞர்கள் தம் இளமைக் காலத்தை தன்னை அழகு படுத்துவதிலேயே அதிக காலத்தை செலவழிக்கிறான். இதனால் இந்த அழகு என்ற சாதனம் மூலம் அவன் எதிர்காலமே கேள்விக்குறியாகும் வாய்ப்பு உள்ளது......இல்லையா?

பெண்கள் கண்ணாடி முன் நின்று தம் முக அமைப்பு,தலைமுடி ஒழுங்குகள் பற்றி கவலைப்படுவதும்,அதை செப்பனிட காலத்தையும் ,பணத்தையும் செலவழிக்கின்றனர்.






நிச்சயமாக கறுப்பு,வெள்ளை என்ற நிற வேறுபாடு அழகிற்கு காரணமாய் இருப்பதில்லை.....................


உங்களுக்கு தெரியுமா மனிதன் தன் உறுப்புகளால் செய்யும் நல் செயல்கள் அவ் வவ் உறுப்புகளுக்கு அழகை சேர்கின்றது..


ஒரு மனிதன் தன் உதட்டை உதட்டு சாயத்தினால் அழகு படுத்துவதன் மூலம் அது அழகாகி விடுவதில்லை.மாறாக மற்றைய மனிதர்களுடன் அவன் பேசும் விதமே அவ் உதட்டிற்கு அழகு சேர்கின்றது.






அதே போல் ஒருவர் தன் கைகளால் ஒருவருக்கு உதவி செய்தலே அக்கைகளுக்கு அழகு சேர்க்கிறது.






அழகு என்பது ஒருவர் தோற்றத்தை கண்ணாடியில் பிரதிபலிப்பது அல்ல.

உங்கள் உண்மையான அழகை தெருந்து கொள்ள உங்கள் உருவத்தை சமூகம் என்னும் கண்ணாடியில் பாருங்கள்
மற்றவர்களுக்காக தம் வாழ்வை அர்பணித்தவர்களே உலக அழகர்கள்,அழகிகள்....


No comments:

Post a Comment